வீரர்களை துடைப்பத்தால் அடித்து விரட்டுவோம்: பெண் எம்.எல்.ஏ., அடாவடி

  Newstm Desk   | Last Modified : 17 Apr, 2019 12:35 pm
tmc-mla-s-controvercial-speech-about-capturing-booth

மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ., ரத்னா கோஷ்கர், வாக்குச்சாவடிகளில் இருந்து தேர்தல் பாதுகாப்பு படையினரை விரட்டியடிப்போம் என்று கூறியுள்ளார்.

தேர்தல் முறைகேடுகள், வன்முறைகளுக்கும் பெரிதும் பெயர் போன, மேற்கு வங்க மாநிலத்தில் இந்த முறை, மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தலை நியாயமானதாக நடத்த வேண்டும் என்பதற்காக பதற்றம் மிகுந்த வாக்குச்சாவடிகளில், மத்திய பாதுகாப்புப் படையினர் துணையுடன் தேர்தல் ஆணையம்  பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ., ரத்னா கோஷ்கர் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, “போரில் வெற்றி பெற வேண்டுமானால், நியாயம், அநியாயம் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நமது வெற்றி ஜனயாக முறையிலானதா அல்லது ஜனநாயகத்துக்கு விரோதமானதா என்றெல்லாம் யோசிக்க முடியாது. ஏதோவொரு வகையில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும்.

கடந்த 2016-இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, நமது தொண்டர்களை மத்திய பாதுகாப்புப் படையினர் எப்படியெல்லாம் தாக்கினார்கள் என்பதை நான் பார்த்திருக்கிறேன். இந்த முறை யாரும் பயப்பட வேண்டாம். பாதுகாப்புப் படையினர் குறித்து கவலைப்பட வேண்டாம். அவர்கள் துடிப்புடன் இருந்தால், துடைப்பத்தை எடுத்து விரட்டுமாறு நமது மகளிரணியினரை கேட்டுக் கொள்வேன்’’ என்றார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close