சாத்வி பிரக்ஞா சிங் தாக்கூர் பாஜகவில் இணைந்தார்: திக்விஜய் சிங்கிற்கு எதிராக போட்டி?

  முத்து   | Last Modified : 17 Apr, 2019 04:56 pm
sadhvi-pragya-singh-joined-the-thakur-bjp

மாலேகான் வெடிகுண்டு வழக்கில் அப்போதைய அரசினால் பொய்யான குற்றச்சாட்டின் பேரில் சிறையிலைடைக்கப்பட்டதாக தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து விடுதலையடைந்த சாத்வி பிரக்ஞா சிங் தாக்கூர் இன்று பாஜகவில் இணைந்தார். 

கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் இரண்டு குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில், 7 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளி என்ற பெயரின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில் சாத்வி பிரக்ஞா சிங் தாக்கூரும் ஒருவர்.

உடல் நலம் மிகவும் குன்றி, அவரது சிறுநீரகம் செயலிழந்த நிலையில் கூட முந்தைய அரசு பிராக்ஞா சிங்கை பிணையில் விட அனுமதிக்க இயலாது என்று நீதிமன்றத்தில் வாதாடி வந்தது.

ஆனால் வழக்கு விசாரணையின் ஓர் கட்டத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அனைவர் மீதும் பொய்யான குற்றம் சுமத்தி அரசு சிறையில் அடைத்துள்ளதாகவும், சுவாமி. அசீமானந்த் உட்பட 5 பேரையும் விடுதலை செய்யுமாறும்  தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது  அதையடுத்து சாத்வி பிரக்ஞா சிங் உட்பட ஐந்து பேரும் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், சாத்வி பிரக்ஞா சிங் தாக்கூர் இன்று தன்னை பாஜகவில் உறுப்பினரா இணைத்துக்கொண்டார். மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஷிவ்ராஜ் சிங் சௌகான், ராம்லால் முன்னிலையில் பிரக்ஞா சிங் முறைப்படி கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்.

மேலும், போபால் மக்களவை தொகுதியில் இருந்து பாஜக வேட்பாளராக சாத்வி பிரக்ஞா சிங், காங்கிரஸ் வேட்பாளர் திக் விஜய் சிங்கிற்கு எதிராக களமிறக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

கட்சியில் இணைந்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  சாத்வி பிரக்ஞா சிங் தாக்கூர், ‘ நான் இன்று பாஜகவில் இணைந்துள்ளேன். தேர்தலில் போட்டியிட்டால் கண்டிப்பாக வெற்றி அடைவேன்’ என்று தெரிவித்துள்ளார்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close