இளைஞர்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும்: பிரதமர் மோடி ட்வீட்

  ஸ்ரீதர்   | Last Modified : 18 Apr, 2019 08:18 am
pm-modi-tweets-about-voting-to-indian-citizens

இளைஞர்கள் அதிக அளவில் வாக்கினை பதிவு செய்வார்கள் என்று நம்புகிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மக்களவைக்கு 2-வது கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 38 மக்களவை தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு சரியாக வாக்குப்பதிவு தொடங்கியது.  

இன்று 2-வது கட்ட மக்களவை தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டரில் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், மக்களவை தேர்தலுக்கான இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது. வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும். இளைஞர்கள் அதிக வாக்குச்சாவடிக்கு சென்று வாக்கினை பதிவு செய்வார்கள் என நம்புகிறேன் என்று அதில் பதிவிட்டுள்ளாா்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close