டார்ஜிலிங்  : வாக்குச்சாவடிக்கு செல்லும் சாலை மறிப்பு!

  Newstm Desk   | Last Modified : 18 Apr, 2019 11:38 am
road-blocked-in-darjeeling-near-by-booth

மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் வாக்குச்சாவடிக்கு செல்லும் சாலையை மறித்தவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.

டார்ஜிலிங் தொகுதிக்கு உட்பட்ட சோப்ரா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு வாக்குச்சாவடியில், தங்களுக்கு வாக்களிக்க அனுமதிக்கவில்லை என வாக்காளர்களில் ஒரு பகுதியினர்  தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

தொடர்ந்து அவர்கள், குறிப்பிட்ட வாக்குச்சாவடிக்கு செல்லும் நெடுஞ்சாலையை மறித்தனர்.  இதனால், பிற வாக்காளர்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது. 
இதையடுத்து போலீஸார்  தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் அதிருப்தியாளர்களை கலைத்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close