இன்றைய கூகுள் டூடுல்! வாக்களிப்பது எப்படி குறித்து விழிப்புணர்வு

  ஸ்ரீதர்   | Last Modified : 18 Apr, 2019 12:53 pm
google-doodle-show-how-to-vote-india-elections-2019

மக்களவை தேர்தல் 2019-யை முன்னிட்டு வாக்களிப்பது எப்படி இந்தியா என்ற விழிப்புணர்வு டூடுல் ஒன்றை கூகுள் நிறுவனம் தனது முகப்பு பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

மக்களவைக்கு 2வது கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை முதல் தொடங்கியது.

தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற வருகிறது.

இந்நிலையில் இன்று வாக்குப்பதிவு தொடங்குவதையொட்டி,அதனை வரவேற்கும் விதமாக கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை உருவாக்கியுள்ளது. அதில், GOOGLE என்ற வார்த்தையில் ஒரு விரல் புரட்சி டூடுல் அமைந்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close