மேனகா காந்தி, பூனம் சின்ஹா வேட்புமனு தாக்கல் !

  Newstm Desk   | Last Modified : 18 Apr, 2019 06:09 pm
menaka-gandhi-poonam-sinha-files-her-nomination


பாஜக வேட்பாளரான மேனகா காந்தி மற்றும் காங்கிரஸ் வேட்பாளரான பூனம் சின்ஹா தங்களது வேட்பு மனுக்களை இன்று தாக்கல் செய்தனர்.

தற்போது மத்திய அமைச்சராக உள்ள மேனகா காந்தி, உத்தரப் பிரதேச மாநிலத்தி்ல் உள்ள சுல்தான்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இதையடுத்து அவர், அங்கு இன்று தமது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். சுல்தான்பூரில் மேனகா காந்தியின் மகன் வருண் காந்தி தற்போது எம்.பி.யாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று, லக்னௌ தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிடும் பூனம் சின்ஹாவும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர், பாஜகவின் முன்னாள் எம்.பி.யும், அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தவருமான சத்ருகன் சின்ஹாவின் மனைவியாவார். இவர்களின் மகள் சோனாக்ஷி சின்ஹா பிரபல ஹிந்தி நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தொகுதியில், பாஜக சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் போட்டியிடுகிறார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close