கர்நாடகாவில் களம்காணும் பிரபலங்கள்!

  Newstm Desk   | Last Modified : 18 Apr, 2019 01:43 pm
karanataka-star-candidates

கர்நாடக மாநிலத்தில் மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் இன்று, 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதில், சிக்பலாபூர் தொகுதியில், காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் எம். வீரப்ப மொய்லி போட்டியிடுகிறார். இதேபோன்று கோலார் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் கே.ஹெச்.முனியப்பா களம் காண்கிறார்.

காங்கிரஸ் -மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியின் சார்பில், தும்கூர் தொகுதியில் முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவே கௌடா போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக, பாஜகவில் அக்கட்சியின் முன்னாள் எம்.பி. ஜி.எஸ்.பசவராஜு களம் காண்கிறார்.

மேலும், கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமியின் மகனும், நடிகருமான நிகில் குமாரசாமி, மாண்டியா தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, பாஜக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளரான நடிகை சுமலதா அங்கு போட்டியிடுகிறார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close