கோவில் கோவிலாக செல்லும் யோகி :டென்ஷனான மாயாவதி!

  Newstm Desk   | Last Modified : 18 Apr, 2019 03:38 pm
mayawati-accuses-adityanath-of-violating-ec-ban-on-canvassing

உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், தேர்தல் சமயத்தில் கோயில் கோயிலாக சென்று கொண்டிருப்பதும் பிரச்சாரம் மேற்கொள்வது போன்றதுதான். பிரச்சாரம்  செய்ய அவருக்கு மூன்று நாட்கள்  தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரி்ன் இந்த செயல்பாட்டை தேர்தல் ஆணையம்  கைக்கட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதாக, அந்த மாநில முன்னாள் முதல்வர் மாயாவதி விமர்சித்துள்ளார்.

தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்ததாக, யோகி ஆதித்யநாத் மூன்று நாட்களும்,மாயாவதி இரண்டு நாட்களும் பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது என, தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு யோகி ஆதித்யநாத் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் காரணமாக, ஊடகங்களில் அவர் தொடர்பான செய்திகள் வந்துகொண்டே  உள்ளன.

இந்த நிலையில், யோகியின் இந்த செயல்பாட்டை விமர்சித்து, மாயாவதி டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தேர்தல் சமயத்தில், யோகி ஆதித்யநாத் கோவில், கோவிலாக சென்று கொண்டிருப்பதும், தலித்துகளின் வீடுகளுக்கு சென்று அவர் உணவருந்துவதும் நூதனமான  பிரச்சாரம் தான். தனது இந்த செயல்பாடுகளின் மூலம், தேர்தல் ஆணையம் அவர் மீது விதித்துள்ள தடையை அப்பட்டமாக மீறியுள்ளார்.

விதிமீறலான அவரது செயல்பாடுகளை தேர்தல் ஆணையமும் கைக்கட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. பாஜகவுடனான, தேர்தல் ஆணையத்தின் இந்த இணக்கமான நிலை தொடர்ந்தால், மாநிலத்தில் சுதந்திரமான மற்றும் நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறுமா என்பது சந்தேகமே" என மாயாவதி தெரிவித்துள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close