நோட்டோ நல்லதா?

  பாரதி பித்தன்   | Last Modified : 18 Apr, 2019 03:34 pm
is-nota-good

திராவிடக் கழக பிரமுகர் ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்ட பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அவள் நாள்தோறும் கோயிலுக்கு செல்வாள், திக பிரமுகரோ கோயிலுக்கு செல்லமாட்டார். சில நாள் கடந்ததும் அந்த பெண் தனியே கோயிலுக்கு செல்வதால் வீதியில் இருப்பவர்கள் கேலி செய்கிறார்கள். நீங்கள் சாமி கும்பிட வேண்டாம் பாதுகாப்பிற்காக கோயில் வரை வாருங்கள் என்று அழைத்தாள். திக பிரமுகரோ சரி பாதுகாப்புக்கு தானே என்று அவளுடன் செல்லுவார், பின்னர் படிப்படியாக சாமி குடும்பிடுபவராக அந்த பெண் அவரை மாற்றிவிடுவார். 

இந்த கதையில் இருக்கும் திமுக பிரமுகர் தான் வாக்காளர்கள். நோட்டா தான் மனைவி. தேர்தலில் ஓட்டுப்பதிவு வெறும் 40 சதவீதம், 50 சதவீதம் என்று இருந்தது. அப்போ யாருக்கு ஓட்டுப் போட்டால் என்ன நாடு திருந்தவா போகிறது. ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன நாம் உழைத்து தான் உண்ண வேண்டும் என்று சீர் திருத்த கருத்துக்களை கொண்ட மக்கள் அதிகம் இருந்தார்கள். அவர்களின் தார்மீக கோபத்திற்கு வடிகாலாகத்தான் நோட்டோ, 49 ஓ போன்றவை எல்லாம். 

தமிழகத்தில் புதுக்கோட்டை எம்பி தொகுதியே இல்லை என்று தொகுதி மறுவரையரைக்கு பின்னர் ஏற்பட்டது. அதற்கு பதிலாக 4 எம்பிக்கள் அந்த தொகுதிக்கு வந்தாலும், எந்த விதமான மேம்பாடும் இல்லை. இதனால் அவர்கள் நோட்டோவிற்கு ஓட்டு போடுவோம் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். இதர தொகுதிகளில் இது போன்ற கோபம் ஏற்பட காரணம் இல்லை. என்றாலும் நோட்டோ அனைத்து தொகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 

பொதுவாக இந்திய அளவில் காங்கிரஸ், பாஜக, தமிழகத்தில் காங்கிரஸ், திமுக, அதிமுக ஆட்சியை மட்டும் தான் பார்த்து இருக்கிறோம். எனவே ஒட்டு மொத்த கோபம் இந்த கட்சிகள் மீது தான். ஆனால் தேர்தலில் இந்த கட்சிகள் மட்டும் போட்டியிட வில்லை. மாற்று அரசியலை ஏற்படுத்த வேண்டும் என்று மக்கள் நீதிமய்யம், நாம் தமிழர் இயக்கம் போன்றவை களத்தில்  உள்ளன. 

இவர்கள் நினைத்து இருந்தால் திமுக, அதிமுக கூட்டணியில் தங்களுக்கு ஒரு இடத்தை பிடித்துக் கொண்டு கூட்டணி சேர்ந்து இருக்கலாம். ஆனால் இவர்களை எதிர்த்து தான் அரசியல் என்பதால் கடைசி நேரத்தில் கூட்டணி வைத்துக் கொண்டு போலி அரசியல் நடத்த விரும்பவில்லை. பாண்டிச்சேரி உட்பட அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறார்கள். 

மாற்று அரசியலை முன்னெடுக்கிறார்கள். இந்த கட்சிகள் உடனே வெற்றி பெறும் என்று யாரும் நினைக்கப் போவதில்லை. இது வரை தேர்தல் முடிவு தெரிந்தே போட்டியிட்டேன், இப்போது தான் வெற்றி வேட்பாளர் என்று போட்டியிடுகிறேன் என சமீபத்தில் பேட்டி ஒன்றில் தமிழிசை கூறியதைப் போலவே நாம் தமிழர் கட்சியும், கமல் கட்சியும் போட்டியிடுகின்றன. அவர்கள் அங்கீகாரம் பெற்றதால் தான் வெற்றி பெறும் கட்சிகள் சிறிதாவது பயத்துடன் ஆட்சி செய்யும். விஜயகாந்த் சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதியிலும் போட்டியிட்டு ஒரு இடத்தை பிடித்து மாநிலம் முழுவதும் 10 சதவீத ஓட்டு பெற்ற பின்னர், திமுகவும், அதிமுகவும் தேமுதிகவை தவிர்க்க இயலாத கட்சியாக பார்த்தது போல வரும் கால தேர்தல்களில் இந்த கட்சிகள் தவிர்க்க முடியாத கட்சியாக மாறும் அப்போது தான் சீமான், கமல் கூறும் கருத்துக்கள் எடுபடும்.  

இவர்கள் கூட அரசியல் கட்சிகள் தான், இப்போது நியாயம் பேசி தேவைப்படும் போது கூட்டணி வைத்துக் கொண்டு நம்மை கேலி செய்யும் என்று நினைக்கலாம். இவர்கள் தொகுதியில் உள்ள சுயேட்சை வேட்பாளர்களுக்கு வாக்களிக்கலாம். ஒரு சில காமெடியன்கள், போலி சுயேட்சைகள் தவிர்த்து பார்த்தால் ஒன்றிரண்டு சுயேட்சைகள் நல்லவர்களாக இருப்பார்கள் அவர்களுக்கு ஓட்டுப் போடலாம். அது போல ஓட்டுப் போட்டால் அவர்கள் நாம் சமூதாயத்திற்கு எதுவும் செய்த போதே இவ்வளவு பேர் ஓட்டு போட்டு இருக்கிறார்கள், நாம் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். 

இப்படி பல வாய்ப்புகள் இருக்கும் போது தேவையில்லாமல் நோட்டோவிற்கு ஓட்டுப் போடுவதன் மூலம் எந்த பலனும் இல்லாமல் போகும். அதிமுக, திமுக மீது உள்ள கோபம் ஓட்டை வீணடித்துவிடக் கூடாது. ஓட்டு பதிவு மையம் வரை வந்து, வரிசையில் நின்று ஓட்டை குப்பை தொட்டியில் போடுவதைவிடுத்து; மாற்று அரசியல் முன்வைப்பவர்களை ஆதரிக்க வேண்டும். 

மேலும் திமுக, அதிமுக கூட்டணிக்கு ஓட்டு போடக் கூடாது என்று நீங்கள் நினைக்கும் காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதே காரணம் தேர்தலுக்கு பின்னர் உங்கள் பணியிடங்களில் இல்லாமல் பார்த்துக் கொள்வதே நீங்கள் நாட்டிற்கு செய்யும் சேவை. அதை செய்ய தொடங்கினீர்கள் என்றால் அரசியல் கட்சிகளும் மாறிவிடும். மனிதனின் கடவுள் அதிக சக்தி கொண்ட மனிதனாகவும், நாயின் கடவுள் அதை விட சக்தி கொண்ட நாயாகத்தான் இருக்கும். இதை புரிந்து கொண்டால் நேர்மையான அரசியல்வாதியை தேர்வு செய்வது எளிது அதற்கு உங்களுக்கு நேர்மை அவசியம். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close