மேற்கு வங்கத்தில் பா.ஜ., பிரமுகர் கொலை? 

  Newstm Desk   | Last Modified : 18 Apr, 2019 03:35 pm
bjp-yuva-morcha-member-hanged-in-west-bengal

மேற்கு வங்கத்தில், பா.ஜ., இளைஞர் அணியை சேர்ந்த,  சிசுபால் சாஹிஸ், 22 மர்மமான முறையில் துாக்கில் தொங்கியதால், அரசியல் காரணங்களுக்காக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். 

மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்கிரசை சேர்ந்த மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், மேற்கு வங்கத்தில், முன் எப்போதும் இல்லாத வகையில், பா.ஜ.,வின் கை ஓங்கியுள்ளதாக உளவுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இதனால், மாநிலத்தில் பா.ஜ., மற்றும் திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே, அடிக்கடி மாேதல் போக்கு காணப்படுகிறது. ஆளுங்கட்சியினர் தங்கள் பலத்தை பிரயோகித்து, பா.ஜ.,வினர் மீது தாக்குதல் நடத்தி வருவது தொடர்கிறது.

இந்த நிலையில், ஆர்ஷா பகுதியில் உள்ள சேனாபனா கிராமத்தில், பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணியான, யுவா மாேர்ச்சா உறுப்பினர், சிசுபால் சாஹிஸ், 22 மர்மமான முறையில், மரத்தில் துாக்கில் தொங்கினார். அவரின் உடலை மீட்ட போலீசார், அதை பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

தேர்தல் சமயத்தில் சிசுபால் துாக்கில் தொங்கியது தற்கொலையா அல்லது அரசியல் காரணங்களுக்காக அவர் காெலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர். 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close