மேற்கு வங்கத்தில் 3:00 மணி நிலவரப்படி 65 சதவீத வாக்குப் பதிவு

  Newstm Desk   | Last Modified : 18 Apr, 2019 04:39 pm
65-polling-in-westbengal-3-00-pm

மேற்கு வங்க மாநிலத்தில், மூன்று தொகுதிகளில் நடைபெறும் மக்களவை தேர்தலில், மாலை 3:00 மணி நிலவரப்படி, 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 

நாட்டின், 17வது மக்களவை இடைத்தேர்தலுக்கான இரண்டாம் கட்டவாக்குப் பதிவு, இன்று காலை, 7:00 மணி முதல் தாெடர்ந்து நடைபெற்று வருகிது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள, ஜல்பைகுரி, டார்ஜிலிங் மற்றும் ராய்கஞ்ச் தொகுதிகளில், இன்று மாலை 3:00 மணி நிலவரப்படி, 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் மூன்று தொகுதிகளும் பதற்றம் நிறைந்தவையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை, இரண்டு தொகுதிகளில் கலவரம் வெடித்தது. இதனால், அந்த தொகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close