வாக்களிக்க முடியாதபடி தடுக்கப்பட்ட ஹிந்துக்கள்... மேற்கு வங்கத்தில் தான் இந்தக் கொடுமை!

  Newstm Desk   | Last Modified : 18 Apr, 2019 05:32 pm
west-bengal-discrimination-on-hindu-s-to-cast-their-votes

மேற்கு வங்க மாநிலம், ராய்கஞ்ச் மக்களவைத் தொகுதியில், வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக குடியேறியுள்ள முஸ்லிம்கள் அதிகம் வாழ்ந்து வரும் பகுதிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளில், ஹிந்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வாக்களிக்க செல்லமுடியாதபடி தடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் டார்ஜிலிங், ராய்கஞ்ச்,  ஜல்பைகுரி ஆகிய மூன்று தொகுதிகளுக்கு மட்டும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ராய்கஞ்ச் தொகுதிக்கு உட்பட்ட சில வாக்குச்சாவடிகளில்,  ஹிந்துக்கள் வாக்களிக்க செல்லமுடியாதபடி திட்டமிட்டு தடுக்கப்படுவதாக அச்சமூகத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக குடியேறிய முஸ்லிம்களுக்கு, மேற்கு வங்க மாநில அரசு அடைக்கலம் கொடுத்துள்ளதுடன், மாநிலம் முழுவதும் ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களுக்கு அவர்களை மறைமுகமாக பயன்படுத்தி வருவதாக,  திரிணாமூல் காங்கிரஸ் மீது ஏற்கெனவே குற்றச்சாட்டு உள்ளது. 

அதே பாணியில் இன்று,  வங்கதேசத்திலிருந்து குடியேறியவர்களை கொண்டு, ஹிந்துக்கள் வாக்குச் சாவடிக்கு செல்லமுடியாதபடி தடுக்கப்பட்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இத்தொகுதிக்கு உட்பட்ட முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதிகளில்  இந்தக் கொடுமை நடைபெற்றுள்ளது.

இதனையும் மீறி வாக்களிக்கச் சென்றால், உங்கள் ஓட்டு ஏற்கெனவே பதிவாகிவிட்டதென தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கூறுவதை கேட்டு, அப்பகுதியைச் சேர்ந்த ஹிந்துக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தங்களின் ஓட்டுரிமை குறித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவோரின் வாக்காளர் அடையாள அட்டைகளும் சேதப்படுத்தப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

 newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close