‛சவுக்கிதார் சாேர் ஹை’ பிரசாரத்திற்கு தேர்தல் கமிஷன் தடை

  Newstm Desk   | Last Modified : 18 Apr, 2019 06:35 pm
ec-ban-on-chowkidar-chor-hai-campaign

மத்திய பிரதேசத்தில், காங்கிரஸ் கட்சியின் சார்பில், பிரதமர் நரேந்திர மாேடியை திருடன் என அழைக்கும் வகையிலான ‛சவுக்கிதார் சோர் ஹை’ என்ற வாசகம் அடங்கிய பிரசாரத்திற்கு, தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. 

மத்திய பிரதேசத்தில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கமல்நாத் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில், மக்களவை தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல், பிரதமர் நரேந்திர மாேடியை, சோர் அதாவது திருடன் என்ற வகையில் பேசி வருகிறார். 

அதாவது, ரபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் முறைகேடு செய்ததாக அவர் குற்றம் சாட்டி வருகிறார். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 

இதற்கிடையே, சவுகிதார் சோர் ஹை, அதாவது காவல்காரன் திருடன் என, பிரதமர் மாேடியை குறிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சியினர் மத்திய பிரதேசத்தில் பிரசாரம் செய்து வருகின்றனர். 

காங்கிரசின் இந்த பிரசாரத்திற்கு தடை விதிக்கக் கோரி, பா.ஜ., சார்பில் தேர்தல் கமிஷனில் மனு அளிக்கப்பட்டது. அதாவது, உச்ச நீதிமன்றம் கூறாததையெல்லாம் கூறி, ராகுல் பாெய் பிரசாரம் செய்வதாகவும், நாட்டின் பிரதமரை திருடன் எனக் கூறி, நாட்டை கேவலப்படுத்துவதாகவும், பா.ஜ., சார்பில் எடுத்துரைக்கப்பட்டது. 

பா.ஜ.,வின் காேரிக்கையை ஏற்ற தேர்தல் கமிஷன், மத்திய பிரதேசத்தில், காங்கிரசார் செய்து வரும், சவுக்கிதார் சாேர் ஹை பிரசாரத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close