தேர்தலை புறக்கணித்த ஒட்டுமொத்த கிராம மக்கள் !

  Newstm Desk   | Last Modified : 18 Apr, 2019 07:19 pm
fatehpur-sikri-villagers-of-mangoli-kala-boycott-election

உத்தரப் பிரதேச மாநிலம், ஃபதேபூர் சிக்ரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மங்கோலி கலா கிராமத்தைச் சேர்ந்த ஒட்டுமொத்த மக்களும் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆக்ரா, மதுரா, புலந்த்ஷகர் உள்ளிட்ட 8 தொகுதிகளுக்கு மட்டும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், ஃபதேபூர் சிக்ரி தொகுதிக்கு உட்பட்ட மங்கோலி் கலா கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஒட்டுமொத்தமாக இன்று தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

தங்கள் கிராமத்தில் விவசாயம் செய்ய போதுமான நீர்பாசன வசதி செய்து தரப்படாததால், இந்த முடிவை எடுத்துள்ளதாக இந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் மதியம் 1 மணி வரை வாக்களிக்க வரவில்லை என்று தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கூறினர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close