அடித்து நொறுக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் : இந்தக் கூத்தும் மேற்கு வங்கத்தில் தான்!

  Newstm Desk   | Last Modified : 18 Apr, 2019 07:57 pm
west-bengal-an-evm-was-vandalized-during-a-clash-between-tmc-and-bjp-workers-in-chopra

மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சோப்ரா பகுதியில் ஒரு வாக்குச்சாவடியில், ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினருக்கும் , பாஜக தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் அந்த வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அடித்து நொறுக்கப்பட்டது.

முன்னதாக, இந்த பகுதியைச் சேர்ந்த ஒரு பிரிவினர், தாங்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை எனக் கூறி, வாக்குச்சாவடிக்கு செல்லும் சாலையை மறித்து மறியலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close