கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் காரின் மீது தாக்குதல் !

  Newstm Desk   | Last Modified : 18 Apr, 2019 08:31 pm
west-bengal-cpm-candidate-from-raiganj-mohammad-salim-s-vehicle-attacked

மேற்கு வங்க மாநிலம், ராய்கஞ்ச் மக்களவைத் தொகுதி கம்யூனிஸ்ட் வேட்பாளரின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ராய்கஞ்ச் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) சார்பில், முகமது சலீம் என்பவர் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் இன்று காலை, தன் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளை பார்வையிட்டுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது, இஸ்லாம்பூர் என்ற இடத்தின் அருகே, சலீமின் கார் சென்று கொண்டிருந்தபோது, அதன் மீது திடீரென தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் உள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close