நாடு முழுவதும் 61 சதவீதம் வாக்குப்பதிவு

  Newstm Desk   | Last Modified : 18 Apr, 2019 08:43 pm
second-phase-election-polling-percentage-61

தமிழகம் உட்பட, 12 மாநிலங்களில் இன்று நடைபெற்ற மக்களவை தேர்தலின் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவில், மாலை 5:40 நிலவரப்படி, 61.12 சதவீத வாக்குகள் பதிவானதாக, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. 

நாட்டின், 17 வது மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு, நாட்டின் 12 மாநிலங்களில் இன்று நடைபெற்றது. இதில், தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி என, முக்கிய மாநிலங்களில் வாக்குப் பதிவு நடைபெற்றது. 

மாலை, 5:40 நிலவரப்படி, அசாம் - 73.32; பீஹார் - 58.14; சத்தீஸ்கர் - 68.70; ஜம்மு காஷ்மீர் - 43; கர்நாடகா - 61.80; மஹாராஷ்டிரா - 55; மணிப்பூர் - 74; ஒடிசா - 57; புதுச்சேரி - 72; தமிழகம் - 61; உத்தர பிரதேசம் - 58; மேற்கு வங்கம் - 75 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் கமிஷன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் சராசரியாக, 61.12 சதவீத வாக்குகள் பதிவானதான இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close