ராகுல் காந்தி பிரதமரானால் ஆதரிப்பேன் - தேவ கௌடா

  Newstm Desk   | Last Modified : 19 Apr, 2019 10:11 am
we-will-stand-by-rahul-gandhi-for-pm-deve-gowda

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமரானால், நாடாளுமன்றத்தில் அவருக்கு அருகே ஒரு ஓரமாக அமர்ந்திருப்பேன். ஆனால், பிரதமராகும் ஆசை எனக்கில்லை என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவ கௌடா தெரிவித்துள்ளார்.

இவர் முன்னாள் பிரதமர் என்ற நிலையில், தற்போதைய மக்களவைத் தேர்தலுக்கு பின், அவர் மீண்டும் அப்பதவிக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்பதாக அவரது மகனும், கர்நாடக முதல்வருமான குமாரசாமி கூறியிருந்தார்.
அதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தேவ கௌடா பதில் அளிக்கையில், “மூன்று ஆண்டுகளுக்கு முன் தேர்தலில் போட்டியிட மாட்டேன் எனக் கூறியிருந்தேன். ஆனால், தற்போது போட்டியிட வேண்டிய கட்டாயமாகிவிட்டது. மறைப்பதற்கு எதுவுமில்லை. எனக்கு எந்தவித ஆசையுமில்லை. ஆனால், தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதும் இல்லை. 

இனி அமையவுள்ள மக்களவையில் மோடியும் இருப்பார் என்பதுதான் எனது கவலை. இதை நான் அவரிடமே கூறிவிட்டேன்.  ராகுல் காந்தி பிரதமரானால், அவருக்கு அருகே அமர்ந்து கொள்வேன். நான் பிரதமராக வேண்டிய அவசியம் ஏற்படவில்லை’’ என்றார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close