மறந்துபோய் பாஜகவுக்கு வாக்களித்ததால் விரலை வெட்டிக் கொண்ட இளைஞர்!

  Newstm Desk   | Last Modified : 19 Apr, 2019 10:42 am
bsp-man-chopped-off-his-own-finger-for-voting-modi

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்ததால், ஆத்திரமடைந்த இளைஞர் தனது விரலை தானே துண்டித்துக் கொண்டார்.

புலஷந்தர் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட ஷிகர்பூர் பகுதையைச் சேர்ந்தவர் பவண் குமார் (25). பகுஜன் சமாஜ் கட்சியின் தொண்டரான இவர், தேர்தலில் கூட்டணிக் கட்சி வேட்பாளரான யோகேஷ் வர்மாவுக்கு வாக்களிக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், வாக்குச்சாவடியில் பாஜக வேட்பாளர் போலா சிங்கிற்கு ஆதரவாக தாமரை சின்னத்தில் வாக்களித்துவிட்டார். 

தனது செயலால் வருத்தமடைந்த பவண் குமார், வீட்டுக்கு வந்து தனது விரலை தானே துண்டித்துக் கொண்டார். இதுதொடர்பான வீடியோவை சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டதும், அது வைரலானது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close