உ.பி.: மாயாவதி, முலாயம் சிங் இன்று ஒன்றாக பிரசாரம்

  ஸ்ரீதர்   | Last Modified : 19 Apr, 2019 12:51 pm
mulayam-singh-mayawati-at-joint-rally-today

உத்தரப்பிரதேச மாநில அரசியலில் பரம எதிரிகளாக இருந்துவந்த  முலாயம் சிங் யாதவும், மாயாவதியும் ஒரே மேடையில்  இன்று பிரசாரம் செய்ய உள்ளனர்.

முலாயம் சிங் போட்டியிடும் மெயின்பூரியில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முலாயம் சிங், மாயாவதி ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த பொதுக்கூட்டத்தில், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சித் தலைவர் அஜித் சிங் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

கருத்து வேறுபாடுகளை மறந்து, சமாஜ்வாதி கட்சியுடன் இணைந்து பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் தேர்தல் வெற்றிக்காக பாடுபட வேண்டும் என மாயாவதி கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த 1995 -ஆம் ஆண்டில் மாயாவதி தங்கியிருந்த இடத்திற்குள் நுழைந்து சமாஜ்வாதி கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.

அன்று முதல் எதிரும் புதிருமாக இருந்த சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜும் இந்தத் தேர்தலில் கூட்டணி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close