ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளேன் - லலித் மோடி

  Newstm Desk   | Last Modified : 19 Apr, 2019 11:40 am
lalit-modi-warning-rahul-gandhi-to-file-file-case-against-him

மோடி எனப் பெயர் கொண்டவர்களெல்லாம் திருடர்களாக இருக்கிறார்கள் எனக் கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் லலித் மோடி தெரிவித்துள்ளார்.

அண்மையில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்ப்போது, நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என மோடி எனப் பெயர் உள்ள அனைவரும் ஏன் திருடர்களாக இருக்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ள லலித் மோடி, “அனைத்து மோடிகளும் திருடர்கள் என்று பப்பு ராகுல் காந்தி கூறியுள்ளார். லண்டனில் நீதிமன்றத்துக்கு அவரை வரவழைப்பேன். ஆனால், உண்மை என்னவென்றால் கடந்த 50 ஆண்டுகளாக நாட்டை இரவுபகல் பாராமல் கொள்ளையடித்துக் கொண்டிருந்தவர்கள் காந்தி குடும்பத்தினர் தவிர, வேறுயாருமல்ல’’ என்று கூறியுள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close