காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திடீர் ராஜினாமா !

  ஸ்ரீதர்   | Last Modified : 19 Apr, 2019 03:01 pm
congress-spokesperson-priyanka-quits-party

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான பிரியங்கா சதுர்வேதி, திடீரென்று அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்தவர் பிரியங்கா சதுர்வேதி. மும்பையை சேர்ந்த இவர், அந்தக் கட்சியில் இருந்து விலகுவதாக திடீரென்று அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் கே.சி.வேணுகோபாலுக்கு அவா் அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில், "கடந்த 10 வருடத்துக்கு முன் காங்கிரஸ் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, இளைஞர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன். இதுவரை பல்வேறு பொறுப்புகளை ஏற்ற நான், அதை நூறு சதவிகிதம் அர்ப்பணிப்புடன் சரியாகவே செய்திருக்கிறேன்.

இந்த பொறுப்பு காரணமாக, பல மிரட்டல்களையும், பாதுகாப்பின்மையையும் என் குழந்தைகள் உட்பட நானும் என் குடும்பத்தினரும் சந்தித்திருக்கிறோம். இதற்காக கட்சியிடம் இருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை. கடந்த சில வாரங்களாக கட்சியில் எனது சேவை மதிக்கப்படவில்லை என நினைக்கிறேன்.

கட்சித் தலைவர்கள் சிலர் என்னிடம் தவறாக நடக்க முயன்ற அதிர்ச்சி சம்பவங்கள், கட்சித் தலைமையால் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு பிறகும் கட்சியில் இருப்பது கண்ணியமற்றது என்பதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து விலகிக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close