சிவசேனாவில் இணைகிறார் காங்கிரஸ் பிரமுகர் !

  ஸ்ரீதர்   | Last Modified : 19 Apr, 2019 03:33 pm
priyanka-chaturvedi-to-join-siva-sena

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ள, அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி, சிவசேனா கட்சியில் இன்று இணைகிறார். 

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்தவர் பிரியங்கா சதுர்வேதி. மும்பையை சேர்ந்த இவர், அந்தக் கட்சியில் இருந்து விலகுவதாக திடீரென்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் கே.சி.வேணுகோபாலுக்கு அவா் ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில்,  பிரியங்கா சதுர்வேதி, சிவசேனா கட்சியில் இணைவார் என்று கூறப்பட்டது. இதை சிவசேனா கட்சியின் எம்.பி, சஞ்சய் ராவத்தும் உறுதிப்படுத்தியுள்ளார். பிரியங்கா, சிவசேனாவில் இன்று இணைகிறார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close