மக்களவை தேர்தலில் தமிழக வாக்குப்பதிவு வரலாறு

  விசேஷா   | Last Modified : 19 Apr, 2019 05:53 pm
loksabha-election-polling-percentage-history-in-tamilnadu

நாடு முழுவதும் நடைபெறும் மக்களவை தேர்தலில் வாக்களிப்பதன் மூலம், நாம் சார்ந்திருக்கும் மக்களவை தொகுதிக்கான பிரதிநிதியை தேர்ந்தெடுப்பதுடன், அதன் மூலம், மத்தியில் யார் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்பதையும் தீர்மானிக்கலாம். 

அந்த வகையில், கடந்த காலங்களில் நடைபெற்ற மக்களவை தேர்தல்களில், தமிழக வாக்காளர்கள் எத்தனை சதவீத வாக்குகளை பதிவு செய்துள்ளனர் என்பது பற்றிய சிறப்பு பார்வையை முன் வைக்கிறோம். இது, 1989ம் ஆண்டு முதல் நேற்று நடைபெற்ற 2019ம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் வரையிலான காலகட்டத்தின் அடிப்படையில் தரப்பட்டுள்ளது. 

1989ம் ஆண்டு, 66 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், 1998ம் ஆண்டு குறைந்தபட்சமாக, 57.95 சதவீத வாக்குகள் பதிவாகின. பின் வாக்குப் பதிவு சதவீதம் மெல்ல மெல்ல அதிகரித்து, 2014ம் ஆண்டு தேர்தலில் அதிகபட்சமாக, 73.68 சதவீத வாக்குகள் பதிவாகின. 

இந்நிலையில், 2019ம் ஆண்டுக்கான மக்களவை தேர்தலில், 70.9 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இம்முறை, தமிழகத்தில், வேலுார் தொகுதி நீங்களாக, 38 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close