வருமான வரித்துறை சோதனை சட்டப்படியே நடக்கிறது - பிரதமர் மோடி

  Newstm Desk   | Last Modified : 20 Apr, 2019 09:51 am
lok-sabha-polls-elections-2019-pmnarendramodi-income-tax-raids-vijay-mallaya-nirav-modi

அரசியல் தலைவர்களுக்குச் சொந்தமான இடங்களில் நடைபெறும் வருமான வரி சோதனைகள் சட்டத்தின் அடிப்படையிலேயே நடைபெறுகிறது என்றும், அவை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலையொட்டி, ‘டைம்ஸ் நவ்’ ஆங்கில செய்தித்தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி பேட்டியளித்தார். அப்போது அரசியல் தலைவர்களின் வீடுகளில் நடத்தப்படும் வருமான வரித்துறையின் சோதனைகள் குறித்த கேள்விக்கு, “அவை சட்டப்படியே நடக்கின்றன. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இல்லை. ஊழல் நடைபெற்றுள்ளது என்பதற்கு இத்தகைய சோதனைகள் சாட்சியாய் அமைந்துள்ளன. குழந்தைகள், வயதான தாய்மார்கள் உள்பட சமூகத்தின் விளிம்பு நிலை மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதியை சிலர் மடைமாற்றி கொள்ளையடித்து வருகின்றனர்’’’ என்று மோடி பதில் அளித்தார்.

பாஜக ஆட்சியில் கடனை திருப்பிக் கட்டியாக வேண்டும் என்ற சூழ்நிலையில்தான் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி ஆகிய கடன் மோசடியாளர்கள் வெளிநாட்டுக்கு தப்பியோடினர் என்றும், இந்த ஆண்டில் அவர்கள் இந்தியாவுக்கு நாடு கடத்திக் கொண்டு வரப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் மோடி தெரிவித்தார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close