திடீரென பல்டி அடித்த வேட்பாளர் - காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு

  Newstm Desk   | Last Modified : 20 Apr, 2019 10:57 am
bsp-candidate-make-a-u-turn-supporting-congress-candidate

சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர் மக்களவைத் தொகுதிக்கு, வரும் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அத்தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் கிலேஷ்வர் குமார் சாஹு, திடீரென காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிப்பதாகக் கூறியுள்ளார்.

இங்கு காங்கிரஸ் வேட்பாளராக பிரமோத் துபே போட்டியிடுகிறார். இந்நிலையில், கிலேஷ்வர் குமார் சாஹு நேற்று செய்தியாளர்களை சந்தித்து, “தேர்தல் பணியாற்றுவதற்கு போதுமான தொண்டர்களும், நிதியாதாரமும் என்னிடம் இல்லை. தேர்தலில் போட்டியிட பகுஜன் சமாஜ் கட்சி எந்தவித நிதியுதவியும் வழங்கவில்லை. காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பஹெலின் பணிகள் எனக்கு பிடித்திருந்தன. அதனால், காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்தேன்’’ என்றார்.

இதனிடையே, தங்கள் வேட்பாளரை ஆசையைக் காண்பித்து காங்கிரஸ் இழுத்துச் சென்றுள்ளது என்றும், இது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்றும் பகுஜன் சமாஜ் கட்சி தெரிவித்துள்ளது. கிலேஷ்வர் குமார் சாஹு மற்றும் பிரமோத் துபே ஆகிய இருவரையும் போட்டியில் இருந்து நீக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close