இந்திரா காந்தியுடன் ஒப்பிட்டால், தான் ஒன்றுமேயில்லை – பிரியங்கா காந்தி

  ஸ்ரீதர்   | Last Modified : 20 Apr, 2019 01:00 pm
can-t-be-compared-to-indira-gandhi-but-will-serve-india-like-her-priyanka

இந்திரா காந்தியுடன் ஒப்பிட்டால், தான் ஒன்றுமேயில்லை என்று கூறியுள்ள பிரியங்கா காந்தி, அவரது அடிச்சுவட்டை பின்பற்றி தேசத்திற்கு சேவை செய்ய உள்ளதாகக் தொிவித்துள்ளாா்.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பேரணியில் பிரியங்கா காந்தி கலந்துகொண்டார்.

இந்த கூட்டத்தில், பிரியங்கா காந்தியையும் அவரது பாட்டியும் முன்னாள் பிரதமருமான இந்திராகாந்தியையும் ஒப்பிட்டு சிலர் பேசினர். 

இதையடுத்து, கூட்டத்தினர் மத்தியில் பேசிய பிரியங்கா காந்தி, இந்திரா காந்தியுடன் ஒப்பிட்டால் தான் ஒன்றுமேயில்லை எனக் குறிப்பிட்டார்.

ஆனால் தேசத்திற்கு சேவையாற்ற வேண்டும் என்ற இந்திரா காந்தியின் நோக்கமே, தனது இதயத்திலும், தனது சகோதரர் ராகுல்காந்தி இதயத்திலும் இருப்பதாக அவர் கூறினார்.

இந்த நோக்கத்தை தங்களிடம் இருந்து யாரும் அகற்றிவிட முடியாது என்றும் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close