திரிணமூல் காங்கிரஸின் தோல்வி உறுதி - பிரதமர் நரேந்திர மோடி

  Newstm Desk   | Last Modified : 20 Apr, 2019 02:14 pm
pm-modi-s-campaign-in-west-bengal

மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தி, மக்கள் பணத்தை கொள்ளையடித்த திரிணமூல் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைவது உறுதி என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் மாபெரும் மாற்றம் ஏற்படவிருப்பதாக ஒவ்வொருவரும் சொல்கின்றனர். வளர்ச்சிக்குத் தடை போட்ட மம்தா பானர்ஜிக்கு பாடம் புகட்ட மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். மக்களை தாக்குவதற்கு அவர் ரௌடிகளை பயன்படுத்தியிருக்கிறார். மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை அவர் கொள்ளையடித்துவிட்டார்.

மேற்கு வங்கத்தில், மக்களவைத் தேர்தலுக்கான இரண்டு கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் மம்தா பானர்ஜி தூக்கத்தை இழந்து தவிக்கிறார். அச்சுறுத்தல், கொள்ளை, ஊழல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டாமா? அப்படியானால், மேற்கு வங்கத்தின் கிராமங்கள், நகரங்கள் என அனைத்துப் பகுதி மக்களும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தலில் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றார் மோடி.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close