குடியுரிமை மாேசடி: காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு சிறையா? 

  Newstm Desk   | Last Modified : 20 Apr, 2019 08:36 pm
was-rahul-gandhi-a-uk-citizen-ec-postpones-amethi-nomination-paper-scrutiny-to-april-22

இந்திய குடியுரிமை சட்ட விதிகளுக்கு புரம்பாக, பிரிட்டன் குடியுரிமை பெற்று, அதை அரசுக்கு தெரிவிக்காமல் மறைத்ததாக, காங்., தலைவர் ராகுலுக்கு எதிராக தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அமேதி தொகுதியில் ராகுலின் வேட்பு மனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், ராகுல் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படுவதோடு, அவர் சிறை செல்லவும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

காங்கிரஸ் தலைவர் ராகுல், வட மாநிலமான, உத்தர பிரதேசத்தின் அமேதி மக்களவை தொகுதியில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். அதே சமயம், தென் மாநிலமான கேரளாவின் வயநாட்டிலும் போட்டியிட திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், அமேதி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட மனுத் தாக்கல் செய்துள்ள துருவ் லால் என்பவர், அமேதி தேர்தல் அதிகாரியிடம் ராகுலுக்கு எதிராக மனு கொடுத்துள்ளார். 

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: ‛காங்கிரஸ் தலைவர் ராகுல், பிரிட்டனில் தன் பெயரில் சொத்து வாங்கியபோது, தான் ஒரு பிரிட்டன் குடிமகன் என குறிப்பிட்டுள்ளார். அப்படியானால், அவர் எப்போது பிரிட்டன் குடியுரிமை பெற்றார் என்பது குறித்து, வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை. அதே போல், தன் பெயரிலான வெளிநாட்டு சொத்துக்கள் குறித்தும் குறிப்பிடவில்லை. 

அதே போல் அந்நாட்டு நிறுவனம் ஒன்றின் செயலராகவும், பங்குதாரராகவும் இருந்துள்ளார். இது பற்றிய ஆவணங்களில், ராகுல் தன்னை  பிரிட்டன் குடிமகன் என குறிப்பிட்டுள்ளார். அந்த நிறுவனத்தை விற்றதன் மூலம், அவருக்கு கிடைத்த வருவாய் குறித்தும், தன் வருமான வரித் தாக்கலில் ராகுல் காண்பிக்கவில்லை. 

இந்திய குடியுரிமை சட்டத்தின் படி,இந்திய பிரஜை ஒருவர் வேறொரு நாட்டின் குடியுரிமை பெற முடியாது. அதே போல், ராகுலின் கல்வித் தகுதியிலும் பல குழப்பங்கள் உள்ளன. அவரின் கல்வி சான்றிதழ்களில், ரவுல் வின்சி என்றே பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அப்படியானால், ராகுல் காந்தி எனக் கூறிக்கொள்ளும் அவரின் கல்விச் சான்றிதழ்கள் எங்கே? ரவுல் வின்சியும், ராகுல் காந்தியும் ஒன்று என்றால், அதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை’இவ்வாறு  அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

இதையடுத்து, ராகுலின் மனு பரிசீலனையை, 22ம் தேதி வரை நிறுத்தி வைத்து, அமேதி தொகுதி தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். ராகுலுக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படுவதோடு, ராகுல் சிறை செல்லவும் நேரிடலாம் என சட்ட  வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close