டெல்லி : காங்கிரஸ் வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு

  ஸ்ரீதர்   | Last Modified : 21 Apr, 2019 12:12 pm
congress-to-announce-candidates-for-7-lok-sabha-seats-in-delhi-within-two-days-says-sheila-dikshit

மக்களவைத் தேர்தலில், டெல்லியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளா்களின் பட்டியல் நாளைக்குள் வெளியிடப்படும் என்று அந்த மாநில காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தலைநகரான டெல்லியில் 7 மக்களவை தொகுதி இருக்கின்றன. இங்கு அடுத்த மாதம் 12-ந்தேதி வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 23 -ந்தேதிதான் கடைசி நாள்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் நாளைக்குள் அறிவிக்கப்படுவார்கள் என்று டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார்.மேலும், தான் சாந்தினி சவுக் தொகுதியில் போட்டியிட வேண்டுமென தொண்டர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றும், இதுகுறித்து கட்சிதான் இறுதி முடிவு எடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close