அரண்மனை, ரூ.200 கோடி சொத்துகளுக்கு அதிபதியான காங்கிரஸ் வேட்பாளர்!

  Newstm Desk   | Last Modified : 21 Apr, 2019 12:02 pm
congress-candidate-jothiraditya-scindia-s-assest-details

மத்தியப் பிரதேச மாநிலம், குணா மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு அரண்மனை, ரூ.200 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன.

இவர் குவாலியர் ராஜ பரம்பரையைச் சேர்ந்தவர். வாரிசு சொத்து அடிப்படையில் அரண்மனை அவருக்கு கிடைக்கப்பெற்றதாகும்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு மிக நெருக்கமானவரான ஜோதிராதித்ய சிந்தியா, குணா தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். தனது சொத்து விவரங்களை பிரமாணப் பத்திரத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ரூ.8 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்க நகைகள், வங்கிகளில் நிரந்தர வைப்புத் தொகையாக ரூ.3 கோடி, 1960 -ஆம் ஆண்டு மாடல் பி.எம்.டபிள்யூ கார் உள்ளிட்டவற்றை தனது சொத்து விவரங்களாக சிந்தியா கூறியுள்ளார். குவாலியர், மும்பை உள்ளிட்ட இடங்களில் மாபெரும் அளவிலான மாளிகைகள் உள்ளிட்டவை அவருக்கு சொந்தமாக உள்ளன.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close