தேர்தல் விதிமீறல் : காங்கிரஸ் அமைச்சருக்கு நோட்டீஸ்

  Newstm Desk   | Last Modified : 21 Apr, 2019 12:42 pm
ec-notice-to-congress-minister-siddhu-for-violation-of-model-conduct

தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் பேசியதாக எழுந்துள்ள புகார் குறித்து பஞ்சாப் மாநில அமைச்சரும், அக்கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பீகார் மாநிலத்தின் கடிகார் தொகுதியில் அண்மையில் தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. அதில் சித்து பேசியபோது, "பிரதமர் நரேந்திர மோடியை பதவியில் இருந்து தூக்கியெறிய வேண்டுமெனில், முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் வாக்குகளை சிதறடிக்காமல் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கச் செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தார். இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நடத்தை விதிகளை மீறும் வகையில் மத அடிப்படையில் பேசியது குறித்து விளக்கம் அளிக்குமாறு சித்துவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close