சமாஜ்வாதி தொண்டர்களுக்கு மாயாவதி கொடுத்த அட்வைஸ்!

  Newstm Desk   | Last Modified : 21 Apr, 2019 12:59 pm
samajwati-workers-should-learn-disipline-from-bsp-mayawati

தலைவர்களின் பேச்சுகளைக் கூர்ந்து கவனிப்பது குறித்து, பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்களிடம் இருந்து சமாஜ்வாதி கட்சித் தொண்டர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று மாயாவதி தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரீய லோக் தளம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மகா கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. இந்நிலையில் ஃப்ரோசாபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், மாயாவதி பேசும்போது, சமாஜ்வாதி கட்சித் தொண்டர்கள் ஆரவாரம் எழுப்பியபடி இருந்தனர். 

அப்போது, ”ஒருவரது பேச்சுக்கு இடையே நீங்கள் கோஷமிட்டபடி இருக்கிறீர்கள்... ஆனால், பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்கள் எப்படி உன்னிப்பாக கவனிக்கிறார்கள் பாருங்கள் !  இது குறித்து அவர்களிடம் நீங்கள் பாடம் கற்க வேண்டும்’’ என்றார் மாயாவதி.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close