மேற்கு வங்கமா இது?... பிகார் போல இல்ல இருக்கு... நொந்துக் கொண்ட தேர்தல் அதிகாரி

  Newstm Desk   | Last Modified : 21 Apr, 2019 01:52 pm
situation-in-west-bengal-like-bihar-15-years-ago-says-ec-special-observer

மேற்கு வங்கத்தில் தற்போதைய தேர்தல் சூழ்நிலை, 15 ஆண்டுகளுக்கு முன்பு பிகாரில் எப்படி இருந்ததோ அதைப் போன்றே இருப்பதாக, அந்த மாநிலத்துக்கான தேர்தல் சிறப்புப் பார்வையாளர் அஜய் வி.நாயக் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த 18 -ஆம் தேதி, டார்ஜிலிங் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு நடைபெற்ற இரண்டாம்கட்ட வாக்குப்பதிவில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.

இந்த நிலையில்,  அங்கு மால்டா, ஜானகிபூர் உள்ளிட்ட ஐந்து தொகுதிகளில், நாளை மறுநாள் (ஏப்.23) மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதையொட்டி,  தேர்தல் சிறப்புப் பார்வையாளராக அஜய் வி.நாயக் நியமிக்கப்பட்டார்.

தமது இந்த நியமனம் குறித்து, நாயக் செய்தியாளர்களிடம் கூறும்போது, " பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, பிகாரில் தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகள் அனைத்திலும் மத்தியப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டிய மோசமாக சூழல் இருந்து வந்தது. அதே சூழல்தான் தற்போது மேற்கு வங்கத்தில் நிலவுகிறது.
அங்கு மக்கள், மாநில போலீஸார் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர். எனவே தான் அவர்கள், வாக்குச்சாவடிகளுக்கு மத்தியப் படைகளின் பாதுகாப்பை எதிர்பார்த்திருக்கின்றனர்" எனத் தெரிவித்தார்.

1984 -ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான இவர், பிகார் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ஆர்எஸ்எஸ் -பாஜகவுடன் தொடர்புடையவர் என்பதால், தேர்தல் சிறப்புப் பார்வையாளர் பொறுப்பிலிருந்து அஜய் நாயக் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close