வயநாடு தொகுதியில் நிர்மலா சீதாராமன் தீவிர பிரசாரம்

  ஸ்ரீதர்   | Last Modified : 21 Apr, 2019 05:54 pm
nirmala-sitharaman-urges-wayanad-voters-to-choose-bjp-ally-bdjs-s-tushar-vellappally

காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பாதுகாப்பு துறை அமைச்சா் நிர்மலா சீதாராமன் இன்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதி எம்.பி.யாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவி வகித்து வருகிறார்.  இந்த மக்களவை தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிடும் அவர், கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியிலிருந்தும் போட்டியிடுகிறார். 

வயநாடு தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக பாரத் தர்ம ஜன சேனா தலைவர் துஷார் வெள்ளப்பள்ளி நிறுத்தப்பட்டுள்ளார். 

அங்கு தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடையும் நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளார் துஷார் வெள்ளப்பள்ளியை ஆதரித்து பாதுகாப்பு துறை அமைச்சா்  நிர்மலா சீதாராமன் இன்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close