நாட்டு மக்களை 70 ஆண்டுகளாக முட்டாளாக்கியது காங்கிரஸ் - நிதின் கட்கரி

  Newstm Desk   | Last Modified : 22 Apr, 2019 11:23 am
congress-fooled-the-people-for-70-years-nitin-gadkari

நாட்டு மக்களை கடந்த 70 ஆண்டுகளாக முட்டாளாக்கி வைத்திருந்தது காங்கிரஸ் கட்சியே என்று மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி விமர்சித்தார்.

மகாராஷ்டிர மாநிலம், பாரமதி மக்களவைத் தொகுதியில் நிதின் கட்கரி பிரசாரம் செய்தபோது பேசியதாவது:
கடந்த 70 ஆண்டுகளாக மக்களை முட்டாளாக்கியது காங்கிரஸ். காங்கிரஸ் - தேசியவாத கூட்டணி ஆட்சியில் இருந்தபோது 10 சதவீத கமிஷனை பெற்றுக் கொண்டு திட்டங்களை பாதியிலேயே விட்டுச் சென்றனர். அதன் பிறகு நாங்கள் வந்து அவற்றை முடித்து வைத்தோம்.
இன்றைக்கு மகாராஷ்டிரத்தில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. மக்களுக்காக மெட்ரோ ரயில் சேவை கொண்டு வரப்பட்டுள்ளது. இரட்டை அடுக்கு மாடி பேருந்துகளை நாங்கள் அறிமுகம் செய்தோம். 
தீவிரவாதிகளிடம் மண்டியிடும் பிரதமர் வேண்டுமா அல்லது அவர்களுக்கு பலமான பதிலடியைத் தரக் கூடிய பிரதமர் வேண்டுமா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும் என்றார் கட்கரி.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close