மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது

  ஸ்ரீதர்   | Last Modified : 22 Apr, 2019 12:01 pm
3rd-phase-of-voting-for-117-constituencies-will-be-held-tomorrow

மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்டமாக 117 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்டமாக குஜராத்,கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா. ஒடிசா, உத்தரப்பிரதேசம், சட்டிஸ்கர், பீகார், அஸ்ஸாம், கோவா, திரிபுரா, ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்கம் மாநிலங்களில் உள்ள 115 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இது தவிர டாமன் மையூர், தாத்ரா நாகர் ஹவேலி யூனியன் பிரதேசங்களில் உள்ள 2 தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட திரிபுரா கிழக்குத் தொகுதியின் தேர்தலும் நாளை நடைபெறுகிறது.

ராகுல்காந்தி இரண்டாவது தொகுதியாக தேர்வு செய்துள்ள கேரளாவின் வயநாடு தொகுதியிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ராகுலுக்காக அவர் சகோதரி பிரியங்கா காந்தி தீவிரமாக வாக்கு சேகரித்தார். 117 தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவுக்கு வந்தது.

வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close