மக்களவைத் தேர்தல் : மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது !

  Newstm Desk   | Last Modified : 23 Apr, 2019 02:25 pm
mp-election-third-phase-vote-casting-begins

கேரளம், கர்நாடகம், குஜராத் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில், மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சற்றுமுன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்றைய மூன்றாம்கட்ட தேர்தலில், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா போட்டியிடும் காந்தி நகர், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவ் களம் காணும் மெயின்புரி உள்பட மொத்தம் 116 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

மேலும், காங்கிரஸ்  மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் உள்ளிட்டோரும் இன்றைய தேர்தல் போட்டியில் இடம்பெற்றுள்ளனர்.

இதில், கேரள மாநிலத்தில் மொத்தமுள்ள 20 தொகுதிகளுக்கும், குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.
ஒடிஸா மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுடன், 4 கட்டங்களாக நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இன்று 42 பேரவைத் தொகுதிகளுக்கும் சேர்த்து அங்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

முன்னதாக, முதல்கட்டமாக ஏப்ரல் 11 -ஆம் தேதி  91 மக்களவைத் தொகுதிகளுக்கும், ஏப்ரல் 18 -ஆம் தேதி இரண்டாம்கட்டமாக  95 மக்களவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.

இன்றைய மூன்றாம்கட்ட தேர்தலுடன் தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட 5 தென்மாநிலங்களில் வாக்குப்பதிவு முழுமையாக நிறைவடைகிறது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close