வெடிகுண்டை விட வாக்காளர் அட்டைக்கு சக்தி அதிகம் : மோடி பஞ்ச் !

  Newstm Desk   | Last Modified : 23 Apr, 2019 02:46 pm
terrorism-s-power-is-ied-people-s-power-is-voter-id-pm-modi

குடிமக்களின் கைகளில் உள்ள வாக்காளர் அடையாள அட்டைக்கு, பயங்கரவாதிகளின்  கைகளில் உள்ள வெடிகுண்டை விட சக்தி அதிகம் என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறினார்.

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று காலை தனது வாக்கினை பிரதமர் மோடி பதிவு செய்தார்.

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
எனது சொந்த மாநிலமான  குஜராத்தில் வாக்களிப்பதன் மூலம் நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். எனது ஜனநாயக கடமையை இன்று நிறைவேற்றியுள்ளது, கங்கை நதியில் புனித நீராடியதை போன்ற பெருமித உணர்வை தருகிறது.

நாட்டின் குடிமக்கள் அனைவரும், தேர்தலில் தவறாமல் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக முதல்முறை வாக்களிக்கும் இளம் வாக்காளர்கள் தேசநலனை கருத்தில் கொண்டு, சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

ஏனெனில், நம் ஒவ்வொருவரின் கைகளில் உள்ள வாக்காளர் அடையாள அட்டைக்கு, பயங்கரவாதிகளின் கைகளில் உள்ள வெடிகுண்டை விட சக்தி  மிக மிக அதிகம். நாம் அனைவரும் இதனை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close