கேரளாவில் அனைத்து தொகுதிகளிலும் விறுவிறு வாக்குப்பதிவு

  Newstm Desk   | Last Modified : 23 Apr, 2019 09:54 am
polling-underway-for-all-seats-in-kerala

கேரள மாநிலத்தில் மொத்தமுள்ள 20 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

கேரளாவில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி, எதிர்கட்சிகளான காங்கிரஸ், பாஜக என மும்முனைப் போட்டி நிலவுகிறது. மொத்தமுள்ள 20 தொகுதிகளிலும் 227 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதில் 23 பேர் மட்டுமே பெண்கள்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் அதிகபட்சமாக 20 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாநிலமெங்கிலும் 24,970 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தம் 2.61 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close