வாக்குச் சாவடியில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

  Newstm Desk   | Last Modified : 23 Apr, 2019 02:30 pm
kerala-a-snake-was-found-at-a-polling-booth-in-kannur-s-kandakai

கேரளாவில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறும் மையத்தில் திடீரென பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

நாடு முழுவதும், 17வது மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இன்று, மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு கேரளா உள்ளிட்ட, 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கேரள மாநிலம் கன்னுார் மாவட்டத்தில் உள்ள கன்டகை எனும் இடத்தில் உள்ள வாக்குச்சாவடியில், மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். 

அப்போது, வாக்குச்சாவடிக்குள் வைக்கப்பட்டுள்ள விவிபாட் எனப்படும் ஒப்புகை சீட்டு இயந்திரத்திற்குள் பாம்பு இருந்ததை அறிந்த வாக்காளர் ஒருவர் அலறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எனினும், அங்கிருந்த சிலர், பாம்பை அப்பகுதியிலிருந்து பத்திரமாக வெளியேற்றினர். வாக்குச்சாவடிக்குள் பாம்பு புகுந்ததால், சிறிது நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.

பாம்பு அப்புறப்படுத்தப்பட்ட பின், வாக்குப்பதிவு மீண்டும் துவங்கி நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடிக்குள் பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close