கருப்பு கொடி காட்டிய தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டருக்கு அடி, உதை

  ஸ்ரீதர்   | Last Modified : 23 Apr, 2019 04:31 pm
bjp-workers-thrashed-an-ncp-worker-at-sdm-office

பா.ஜ.க. வேட்பாளருக்கு கருப்பு கொடி காட்டிய தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டருக்கு அடி, உதை விழுந்துள்ளது.

2019 மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.  இதில் முதற்கட்ட தேர்தல் கடந்த 11ஆம் தேதியும் மற்றும் 2வது கட்ட தேர்தல் கடந்த 18ஆம் தேதியும்  முடிவடைந்துள்ளது.

தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் பிரசாரம், பொது கூட்டம் மற்றும் பேரணி நடத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 15 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் இன்று 3ஆவது கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.

மத்திய பிரதேசத்தின் போபால் மக்களவை தொகுதி பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிடுபவர் பிரக்யா சிங் தாக்கூர்.  இவர் தேர்தல் பேரணி  சென்றபோது, தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டர் ஒருவர் கருப்பு கொடி காட்டியுள்ளார் என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.க. தொண்டர்கள் சிலர், போபால் நகரில் உள்ள மாஜிஸ்திரேட் அலுவலகத்தில் வைத்து அந்நபரை அடித்து உதைத்ததாக் கூறப்படுகிறது.  இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் அவரை மீட்டு அங்கிருந்து அழைத்து சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close