மம்தா பானா்ஜியை வறுத்தெடுத்த பிரதமா் மோடி

  ஸ்ரீதர்   | Last Modified : 23 Apr, 2019 06:58 pm
pm-modi-slams-mamta-in-west-bengal-election-campain

திாிணாமுல் காங்கிரஸ் கட்சி கூட்டத்திற்கு மக்கள் வராததால், வெளிநாட்டில் இருந்து நடிகரை கொண்டு வந்து பிரசாரம் செய்யும் நிலைக்கு அக்கட்சி தள்ளப்பட்டுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி கிண்டல் செய்துள்ளாா்.

மேற்கு வங்கத்தில் இன்று பிரசாரம் செய்த பிரதமர் மோடி, மம்தா பானர்ஜியை கடுமையாக விமா்சித்தாா். பிரதமர் பதவி ஏலம் விடப்பட்டால் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் அவர்கள் ஊழல் செய்த பணத்தின் மூலமாக அதனை வாங்க முயற்சிப்பர். ஆனால் பிரதமர் பதவியை பணத்தால் வாங்க முடியாது என்றார். 

மேலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வெளிநாட்டு நடிகர் பிரசாரம் செய்த விவகாரத்தை குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, திரிணாமுல் காங்கிரஸ் கூட்டத்திற்கு இப்போது மக்கள் வருவதில்லை. எனவே, வெளிநாட்டில் இருந்து நடிகரை கொண்டு வந்து பிரசாரம் செய்யும் நிலைக்கு அக்கட்சி தள்ளப்பட்டுள்ளது எனக் கண்டலாக கருத்து கூறியுள்ளார். 
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close