3-ஆம் கட்ட மக்களவை தேர்தல்: 63.24% வாக்குப்பதிவு

  ராஜேஷ்.S   | Last Modified : 23 Apr, 2019 08:24 pm
the-3rd-phase-of-lok-sabha-polls-63-24-turnout

நாடு முழுவதும் இன்று நடைபெற்று நிறைவடைந்த, 3-ஆம் கட்ட மக்களவை தேர்தலில் 63.24% வாக்குகள் பதிவாகியுள்ளன.

நாட்டின், 17வது மக்களவை தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு, கேரளா, குஜராத் உள்ளிட்ட, 13 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள, 115 தொகுதிகளில் விறுவிறுப்புடன் இன்று நடைபெற்று முடிவடைந்தது.

இதையடுத்து, வாக்குப்பதிவின் இறுதி நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், 3-ஆம் கட்ட மக்களவை தேர்தலில் 63.24% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று அறிவித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக மேற்குவங்கத்தில் 79.36% வாக்குகளும், குறைந்தபட்சமாக ஜம்மு.காஷ்மீரில் 12.86% வாக்குகளும் பதிவாகியுள்ளது.

மாநில வாரியாக பதிவான வாக்குப்பதிவு சதவீதம்: 

அஸ்ஸாம் - 78.29%

பீஹார் - 59.97%

கோவா - 71.09%

குஜராத் - 60.21%

ஜம்மு-காஷ்மீர் - 12.86%

கர்நாடகா - 64.14%

கேரளா - 70.21%

மஹாராஷ்டிரா - 56.57%

ஒடிஷா - 58.18%

திரிபுரா - 78.52%

உத்தர பிரேதசம் - 57.74%

மேற்கு வங்கம் - 79.36%

சத்தீஸ்கர் - 65.91%

தாத்ரா, நாகர் ஹவேலி - 71.43%

டாமன் டையூ - 65.34%

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close