கூட்டணியில் சேர்க்கவில்லை என வருந்திய சீதாராம் யெச்சூரி

  Newstm Desk   | Last Modified : 24 Apr, 2019 08:26 am
seeharam-yechury-worry-about-no-place-in-grand-alliance-in-bihar

பீகாரில் எதிர்க்கட்சிகள் அமைத்த மகா கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது மிகவும் வருந்தந்தக்க விஷயமாக உள்ளது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.

ராஷ்ட்ரீய லோக் தளம், காங்கிரஸ், ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி, ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகள் இணைந்து அமைத்துள்ள மகா கூட்டணியில் இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகள் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், பீகார் மாநிலம் பாட்னாவில் சீதாராம் யெச்சூரி பேசுகையில், “மகா கூட்டணியில் இடம் தராதது வருந்தத்தக்கது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கும், இடதுசாரிகளுக்கும் மதச்சார்பின்மைக்காக போராடுவதில் நீண்ட நெடிய பந்தம் இருக்கிறது. பெகுசராய் மக்களவைத் தொகுதியில் மட்டும் நாங்கள் போட்டியிடுகிறோம். அதே சமயம், பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக பிற இடங்களில் மகா கூட்டணியை ஆதரிக்கிறோம்’’ என்றார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close