ராகுல் காந்தி தொகுதியில் வாக்களிக்க வேகம் காட்டிய மக்கள் - 79% பதிவு

  Newstm Desk   | Last Modified : 24 Apr, 2019 09:00 am
in-wayanad-rahul-s-second-seat-vote-percentage-is-79

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும், கேரள மாநிலத்தின் வயநாடு மக்களவைத் தொகுதியில் மக்கள் அலையென திரண்டு வந்து வாக்களித்திருப்பதாகத் தெரிகிறது. அங்கு 79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும்போது வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த தேர்தலின்போது வயநாடு தொகுதியில் 73.23 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

ராகுல் காந்தியை எதிர்த்து இடது ஜனநாயக முன்னணி சார்பில் பி.பி.சுனீர், பாஜக கூட்டணி சார்பில் துஷர் வெள்ளப்பள்ளி ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தின் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடும் அதே சமயம், இந்த முறை வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close