ஆம் ஆத்மியுடன் கூட்டணிக்கு தயார் : ராகுல்

  Newstm Desk   | Last Modified : 24 Apr, 2019 10:34 am
rahul-hints-about-last-minute-coalition-with-aap-in-delhi

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கடைசி நிமிடத்தில் கூட்டணி அமைவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், டெல்லியில் இரு கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிடுகின்றன. மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலும்கூட அங்கு தொடங்கிவிட்டது.

இந்நிலையில், ":நவ்பாரத்" என்ற ஹிந்தி நாளிதழுக்கு ராகுல் காந்தி அளித்துள்ள பேட்டியில், “டெல்லியில் ஆம் ஆத்மி 4 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகளிலும் போட்டியிடலாம் என்ற யோசனையை முன்வைத்தவர் கெஜ்ரிவால்தான். அதற்கு எங்கள் கட்சியின் டெல்லி நிர்வாகிகள் ஒப்புக் கொள்ளவில்லை. அதன் பிறகு அவர்களை நாங்கள் சமரசம் செய்த நிலையில், ஹரியாணாவிலும் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற புதிய நிபந்தனையை கெஜ்ரிவால் தெரிவித்தார்.

கடைசி நிமிடம் வரையிலும் நாங்கள் கூட்டணிக்கு தயாராக இருக்கிறோம். ஹரியாணாவில் கூட்டணி என்ற நிபந்தனையை கெஜ்ரிவால் கைவிட்டால், அடுத்த கணமே டெல்லியில் கூட்டணி சாத்தியமாகும்’’ என்றார் ராகுல்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close