கடந்த தேர்தலை விட பாஜகவுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும்: அமித் ஷா

  டேவிட்   | Last Modified : 25 Apr, 2019 08:56 am
bjp-can-get-more-seats-in-this-election-amit-shah

கடந்த 2014-ல் நடைபெற்ற தேர்தலை விட நிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் என பாரதிய ஜனதாவின் தலைவர் அமித் ஷா கூறியுள்ளார். 

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். அங்கு பாரதிய ஜனதாவின் ஊடக மையத்தையும், மெகமூர்கஞ்ச் என்ற பகுதியில் பிரதமர் மோடியின் தேர்தல் அலுவலகத்தையும் அமித்‌ஷா  தொடங்கி வைத்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, கடந்த 2014-ல் நடைபெற்ற தேர்தலை விட நிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் எனவும், இதுவரை நடந்துள்ள வாக்குப்பதிவை வைத்து பார்க்கும் போது பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். 

மேலும், இந்து பயங்கரவாதம் குறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும்,  ஊழல் செய்தவர்களை பாரதிய ஜனதா அரசு தண்டிக்காமல் விடாது எனவும் அமித்ஷா குறிப்பிட்டார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close