வாரணாசியில் பிரமாண்ட பேரணி: பிரதமர் நரேந்திர மாேடி பங்கேற்பு

  Newstm Desk   | Last Modified : 25 Apr, 2019 05:40 pm
pm-modi-road-show-at-varanasi

மக்களவை தேர்தலில், வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மாேடி, அங்குள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில், அதன் நிறுவனர் மதன் மாேகன் மாளவியாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து, பிரமாண்ட பேரணியில் பங்கேற்றுள்ளார். 

மக்களவை தேர்தலுக்கான மூன்று கட்ட ஓட்டுப்பதிவுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நான்காம் கட்ட ஓட்டுப் பதிவு, 29ம் தேதி நடைபெறவுள்ளது. கடந்த தேர்தலில், உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில், பா.ஜ., சார்பில் களம் இறங்கிய நரேந்திர மாேடி, பிரமாண்ட வெற்றி பெற்று நாட்டின் பிரதமர் ஆனார்.

இந்நிலையல், இம்முறையும், அவர் அதே தொகுதியில் களம் காண்கிறார். இம்முறை வாரணாசி மக்களிடையே பிரசாரம் செய்யும் பிரதமர் மாேடி மற்றும் பா.ஜ.,வினர், வாரணாசி தொகுதியின் வெற்றி மட்டுமின்றி, ஒட்டு மாெத்த தேர்தலில் பா.ஜ.,வின் வெற்றி குறித்தே அதிகம் பேசி வருகின்றனர். 

இந்நிலையில், சுதந்திர போராட்ட வீரரும், சமூக மாற்றத்திற்கு வித்திட்ட தலைவரும், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக நிறுவனருமான மதன் மாேகன் மாளவியாவின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிரதமர் நரேந்திர மாேடி, அலைகடலென திரண்டுள்ள தொண்டர்கள், பொதுமக்கள் மத்தியில், பேரணியாக சென்று, கங்கா ஆரத்தியில் பங்கேற்கிறார். 

பிரதமர் மாேடியை வரவேற்ற ஆயிரக்கணக்கானோர், அவர் செல்லும் வாகனத்திற்கு முன்னும் பின்னும் தொடர்ந்து செல்கின்றனர். கங்கை கரையை அடையும் அவர், அங்கு நடக்கும் மாலை நேர கங்கா ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்துவார் என அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close