ராகுல் காந்தி சென்ற விமானத்தில் கோளாறு!

  முத்துமாரி   | Last Modified : 26 Apr, 2019 12:53 pm
engine-trouble-on-our-flight-to-patna-today-rahul-tweet

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று பாட்னா சென்ற நிலையில், விமான என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் அவர் டெல்லிக்கே திரும்பிச் சென்றார். 

7 கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், 3 கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ளது. தேர்தல் நடைபெறவுள்ள பகுதிகளில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. 

அதன்படி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று பீகார், ஒடிசா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டு இருந்தார். அதற்காக இன்று அவர் பாட்னா புறப்பட்ட நிலையில், விமான என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. 

இதைத்தொடர்ந்து, ராகுல் மீண்டும் டெல்லிக்கே திரும்பினார். மேலும், இன்று நடைபெறவிருந்த பிரச்சார கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கும் ராகுல் வருத்தம் தெரிவித்துள்ளார். 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close